சற்றும் எதிர்பார்க்காதது...
எத்தனை எத்தனை நினைவுகள்...மிகவும் அழகான, பசுமையான நினைவுகள்..
என் நினைவுபடி ஆட்டோவில் தொடங்கியது அந்த பயணம்..ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லாமலிருக்க அத்தனை ஆர்ப்பாட்டம் நிகழும் வீட்டில்..! கழிவறைக்குள் ஒழிந்த நாட்களெல்லாம் உண்டு...நினைவுகூறுகிறேன்...எத்தனை அழகான நினைவுகளை தந்து சென்றிருக்கிறார் என்று!.

ஆட்டோவில் ஏறியதும் அழ தொடங்கும் என்னை ஆசுவாசப்படுத்த அவர் ஒருபோதும் தவறியதில்லை....ஆட்டோ ஆம்னி ஆகி,பின்பு வேன் ஆக , அதற்கு அவர் போட்ட உழைப்பு என்ன என்பதை நன்கு அறிவோம்..அவர் பயிற்றுவிக்கும் வகுப்புகள் எல்லாம் அத்தனை அறிவார்ந்ததாக இருக்கும்....கணினியை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே...மதிய உணவு வேளையில் நான் மீன் (முள்ளை நீக்கி) சாப்பிடுவதைக் கண்டு விளையாட்டாக,மீனின் முள்ளை சாப்பிட்டுக் காட்டு என்பார்...நானும் சாப்பிட்டுவிட்டு பெரிய சாதனை நிகழ்த்தியது போல் அவரை பார்ப்பேன்..சிரிப்பார்...அவருக்கும் எங்களுக்குமான உறவு ஆசிரியர் மாணவர் என்பதைத் தாண்டி, உணர்வுபூர்வமாக இருந்தது...அவர் மீதான மரியாதை, அன்பு கலந்த பயம் இன்றும் தொடர்கிறது...இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த போது நான் பேசியதைக் கண்டு, 'இவள் வழக்கறிஞர் ஆனால் நன்றாக இருக்கும்' என்றார். இன்று எங்களை விட்டு தூரம் சென்று விட்டார்.
அவருடைய இழப்பு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ விவரிக்க முடியாதது...எங்களுடைய வளர்ச்சியில் பெருமிதமும் மகிழ்ச்சியும் எப்போதும் கொண்டிருந்தார்...பெருவெற்றியுடன் அவரை சந்தித்துவிட்டு 'அடித்தளம் நீங்க போட்டது சார் ' என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்...அப்படி இனி அவரிடம் கூற முடியாது என்று நினைக்கிற பொழுது கண்ணீர் பொங்குகிறது...அவர் எங்கு சென்றாலும் அவருடைய ஆசியும் வாழ்த்துக்களும் எப்போதும் எங்களுக்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்...எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கு பின்னாலும் நீங்கள் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் இருக்கிறது, சார்..!

(என் அன்பிற்கினிய ஆசிரியருக்காக....)