... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அவங்க..நா வரேன்னு சொன்னதும், அவங்க அதுல காமிச்ச ஆர்வம், உண்மையாவே welcoming ஆ இருந்துச்சு. பஸ்ல ஏறுனதுல இருந்து இறங்குற வர எனக்கு அத்துன போன் கால் "இப்போ எங்கமா வந்துருக்க? பக்கத்துல வந்தாச்சா?" னு கேட்டுட்டே இருந்தாங்க. எனக்கு ஒரு விதமான மனநிலை... இப்போ அத சொல்லத் தெரியல.. பஸ்ல இருந்து இறங்கும் போது ஒரு பாட்டி அவங்க கட்டப்பை அ ஆட்டோ நிக்கிற இடம் வர வந்து ஏத்தி தர முடியுமானு கேட்டாங்க.... நா எனக்கு ஒருத்தங்க வெயிட் பண்றாங்களே பாட்டினு சொல்லிட்டு அப்படியே சுத்தி பாத்தேன். ஒரு ஆட்டோ இருந்துச்சு. நா அந்த ஆட்டோ அண்ணாவ கை காமிச்சு, உள்ள வர சொல்லி பாட்டி பேக்கை எல்லாம் ஏத்தி கொடுத்துட்டு, அவங்க எனக்காக வெயிட் பண்ணுவாங்களேனு கொஞ்சம் வேகமா நகர போனா, அந்த பாட்டி என் கைய பிடிச்சு "ரொம்ப நன்றி மா" னு சொல்லிட்டே ஆட்டோ ல ஏறி உக்காந்தாங்க...
நா கடகடனு வேகமா போயி அவங்க சொன்ன steps ல ஏறி, ஆட்டோ எங்க நிக்குது அப்படின்னு கண்ணாலயே ஒரு quick scan பண்ணிட்டே போனேன். எனக்கு நேரெதிரா நின்ன ஒரு ஆட்டோ டிரைவர் என்ன curious ஆ பார்த்தாங்க, நானும் பாத்தேன், அப்பவே டக்குனு கண்ண zoom பண்ணினா, அவங்க ஒரு கையில எனக்கு கால் பண்ண போன் எடுத்துட்டு இருந்தாங்க, நா அதுக்குள்ள I'm finally hereங்கிற மாதிரி அவங்கள பாத்தேன். அவ்ளோதாங்க!!! உடனே ரெண்டு பேரு முகமும் full ஆ bright ஆ ஆச்சி.. வெயிட் பண்ணுனு சைகை காமிச்சிட்டு ஆட்டோ turn ஆகி என் பக்கத்துல வந்து நின்னுச்சி, நா சந்தோசமா ஏறி உக்காந்தேன். உடனே எப்படி கரெக்ட் ஆ steps ஏறி வந்தனு கேட்டாங்க, நா சொன்னேன் இதுக்கு முன்னாடி once வந்துருக்கேனு.. அப்படியே நா இவ்ளோ நாள் நா மிஸ் பண்ணின எங்க face-to-face conversations தொடங்கி, சிலபல feel good memoriesஓட ஒரு விதமான much needed meet up ஆ நிறைவு பெற்றது.
இன்பமான ஒரு பயணம்.
Thank you Universe 🧿✨🤲🏼🍀🌻