Monday, January 26, 2026

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அவங்க..நா வரேன்னு சொன்னதும், அவங்க அதுல காமிச்ச ஆர்வம், உண்மையாவே welcoming ஆ இருந்துச்சு. பஸ்ல ஏறுனதுல இருந்து இறங்குற வர எனக்கு அத்துன போன் கால் "இப்போ எங்கமா வந்துருக்க? பக்கத்துல வந்தாச்சா?" னு கேட்டுட்டே இருந்தாங்க. எனக்கு ஒரு விதமான மனநிலை... இப்போ அத சொல்லத் தெரியல.. பஸ்ல இருந்து இறங்கும் போது ஒரு பாட்டி அவங்க கட்டப்பை அ ஆட்டோ நிக்கிற இடம் வர வந்து ஏத்தி தர முடியுமானு கேட்டாங்க.... நா எனக்கு ஒருத்தங்க வெயிட் பண்றாங்களே பாட்டினு சொல்லிட்டு அப்படியே சுத்தி பாத்தேன். ஒரு ஆட்டோ இருந்துச்சு. நா அந்த ஆட்டோ அண்ணாவ கை காமிச்சு, உள்ள வர சொல்லி பாட்டி பேக்கை எல்லாம் ஏத்தி கொடுத்துட்டு, அவங்க எனக்காக வெயிட் பண்ணுவாங்களேனு கொஞ்சம் வேகமா நகர போனா, அந்த பாட்டி என் கைய பிடிச்சு "ரொம்ப நன்றி மா" னு சொல்லிட்டே ஆட்டோ ல ஏறி உக்காந்தாங்க...
நா கடகடனு வேகமா போயி அவங்க சொன்ன steps ல ஏறி, ஆட்டோ எங்க நிக்குது அப்படின்னு கண்ணாலயே ஒரு quick scan பண்ணிட்டே போனேன். எனக்கு நேரெதிரா நின்ன ஒரு ஆட்டோ டிரைவர் என்ன curious ஆ பார்த்தாங்க, நானும் பாத்தேன், அப்பவே டக்குனு கண்ண zoom பண்ணினா, அவங்க ஒரு கையில எனக்கு கால் பண்ண போன் எடுத்துட்டு இருந்தாங்க, நா அதுக்குள்ள I'm finally hereங்கிற மாதிரி அவங்கள பாத்தேன். அவ்ளோதாங்க!!! உடனே ரெண்டு பேரு முகமும் full ஆ bright ஆ ஆச்சி.. வெயிட் பண்ணுனு சைகை காமிச்சிட்டு ஆட்டோ turn ஆகி என் பக்கத்துல வந்து நின்னுச்சி, நா சந்தோசமா ஏறி உக்காந்தேன். உடனே எப்படி கரெக்ட் ஆ steps ஏறி வந்தனு கேட்டாங்க, நா சொன்னேன் இதுக்கு முன்னாடி once வந்துருக்கேனு.. அப்படியே நா இவ்ளோ நாள் நா மிஸ் பண்ணின எங்க face-to-face conversations தொடங்கி, சிலபல feel good memoriesஓட ஒரு விதமான much needed meet up ஆ நிறைவு பெற்றது.

இன்பமான ஒரு பயணம்.

Thank you Universe 🧿✨🤲🏼🍀🌻




Friday, June 20, 2025

Godsend🌻

சற்றும் எதிர்பாராத நேரத்தில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ வருவார், தேவ தூதர் போல, கைபிடித்து கரை ஏற்றுவார் என்றெல்லாம் கதையில் தான் கேட்டிருக்கிறேன். அப்படியான தேவ தூதர் தன்மை கொண்ட மனிதர்கள் நம் வாழ்வில் வரும்போது,
சில கதைகள் நிஜமாகும்போது, அது கனவு போல இருக்கிறது.

நான் எனக்கான பாதையில், மனதில் பல கேள்விகளுடன் பயணிக்கும்போது, என்னை நிறுத்தி, 
"நீ எதை நோக்கி பயணிக்கிறாய்?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
நான் பதிலளிக்க விரும்பாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
எனினும், தோன்றியதை பதிலாக கூறினேன்.
அதைக் கேட்டுவிட்டு சற்றும் தாமதிக்காமல் "நீ தெளிவாக இல்லை" என்ற பதிலை கூறினார்.

"ஆம்" என்று உரக்க ஆமோதிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மௌனமாக நின்றேன்.

சிரித்தே கடந்தேன்.

அன்று முழுக்க அந்த உரையாடல் என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. 

அப்படியாக அந்த தேவ தூதர் என் வாழ்வில் வந்தார்.

இப்படி ஒவ்வொரு முறையும் எங்களுக்குள் ஏதாவது உரையாடல் நிகழும், பின்பு அன்றைய நாள் முழுக்க நான் யோசனையில் ஆள்வதும் வாடிக்கையாய் இருந்தது.

எப்போதும் ஒரு புன்னகை மட்டும் அவரை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் ஏற்படும்.

யாரிடத்திலும் யோசித்து பழகும் நான், அவரிடத்தில் சில உரையாடல்கள் மூலமே இணக்கமாகி போனேன். 

கருத்து பகிர்தலுக்கு ஒரு போதும் பஞ்சமில்லை. மன நிறைவான நாட்கள். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் பல பயணங்களை, அந்த பயணம் முற்று பெற்றப்பின் அதை எண்ணி மனம் மகிழ்வதையோ நெகிழ்வதையோ வாடிக்கையாக கொண்டிருப்போம். ஆனால் சில பயணங்களை அந்த பயணத்தின் போதே உள்ளம் குளிர ரசிப்போம். 

இந்த பயணம் அப்படிதான் எனக்கு.
எப்போதும் நான் நினைத்து நன்றி சொல்ல பல நல்ல நினைவுகளையும் படிப்பிணையையும் தந்தது. தோன்றும்போதெல்லாம் நினைத்து நன்றி கூறினேன். இனியும் கூறுவேன்.

இப்படிப்பட்ட மனதுக்கு நெருக்கமான பயணத்தை யாரும் முடித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் தானே.. நானும் விரும்பவில்லை.

(இனியும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்...)















Friday, April 11, 2025

ஒரு ஜீவன் அழைத்தது

தொடராமலே முற்றுபெற்றது 
இன்று 
எல்லா முதல் காதல் (?) உரையாடல்களிலும் 
முற்று பெறாமல் தொடர்கிறது.

#பொக்கிஷம் 

Saturday, February 22, 2025

அன்பு

"அவ எனக்கு பிள்ள"

சில நேரங்களில் சில மனிதர்கள் நமக்கு என்றும் மறக்கமுடியா மன மகிழ்வையும் மன நிறைவையும் சத்தமே இல்லாமல் தந்து கடக்கிறார்கள்.

🫴🏼✨
 
#MyFairy

Saturday, January 11, 2025

மனதிற்கு இதமான மனிதர்கள்

என்னோட இந்த blog-ல, நா இதுவர சந்திச்ச, என் மனதுக்கு இதமான மனுஷங்கள பத்தி எழுதியிருக்கேன். வெளிப்படையா எழுதுறத விட, மறைமுகமா எழுதினது தான் அதிகம். நம்ம மனசுல இருக்குற ஒரு விஷயம் யாருக்குமே பகிராம உள்ளேயே வச்சி ரசிக்கிறதுல ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது. ஒருத்தங்க கிட்ட நம்ம மகிழ்ச்சிய பகிரும் போது அது இரட்டிப்பாகும்-னு பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையும் கூட தான். இருந்தாலும், சமீப காலங்கள்ல என் மனசுக்கு நெருக்கமான சில நிகழ்வுகள், விஷயங்கள், சம்பவங்கள்னு நா இந்த blog-ல எழுதுறத வழக்கமா வச்சிருக்கேன். எந்த மனுஷங்ககிட்டயும் பகிராம, மனசுல இருக்குற ஒரு விதமான உணர்வோட, சோகமோ சுகமோ அத எழுதி முடிக்கும் போது ஒரு அமைதி கிடைக்கும்.
அதுதான் என்ன பொறுத்தவர The Moments. 

பெரும்பாலும் அந்த மாதிரி MOMENTS நம்ம மனசுக்குள்ள என்னைக்கும் ஒரு ஓரத்துலயாவது இருக்கும். ஆனாலும் காலம் போக போக அந்த moments அதே உணர்வ நமக்கு திருப்பித்தரதில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் என்ன பூரிப்படைய செஞ்சிருக்கலாம். ஆனா இப்போ அதே விஷயம் அதே பூரிப்ப தருமானு கேட்டா, நிச்சயமா இல்ல. மாறிட்டே தான் இருக்கு. இருந்தாலும் இங்க எழுதுறதுக்கு காரணம் ஒன்னுதான். RE-LIVE பண்ண தான். நேத்து ஒரு மகிழ்வான நாள். 

சக்கரை பொங்கல் 🥄
I'M LIVING MY MOMENT என்பது போல ஒரு 'நடனம்' 
Games 
📲🍚
As usual Dialogues

நிறைவான நாள்னு சொல்றத விட, மகிழ்வான நாள்.

THANK YOU, சில மனுஷங்க எவ்ளோ நாள் நம்ம LIFEல இருப்பாங்கனு தெரியல, ஆனா இருக்குற வர அவங்க தர மனதுக்கு இதமான அன்பு இருக்கும்னு நம்புவோம்.

#மனிதர்கள் #🌻



இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...