Tuesday, December 5, 2023

கடந்த காலம்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி திரும்பி பார்க்கையில், நான் ஆசையாக வளர்த்த பூ ஒன்று என் தோட்டத்தில் தற்போது இல்லை என்பதை உணர்கிறேன். ஆனால், அது குறித்து தற்போது என்னிடத்தில்  எந்த வருத்தமோ கவலையோ இல்லை.
இது எப்படி சாத்தியமானது?
நான் அந்தச் செடியை அத்தனை ஆசையாக வளர்த்தேன். ஒரு நாள் விடாமல் மகிழ்ச்சியுடன் தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். பெரும்பாலான நேரம் அதை ரசித்துக்கொண்டே இருந்தேன். 
பலர் என்னிடம் கேட்டார்கள், "ஏன் இப்படி தீவிரமாக அந்த பூவையே ரசித்துக் கொண்டு இருக்கிறாய், உனக்கு வேறு வேலையே இல்லையா?" என்று.
வேலை எல்லாம் இருந்தது, ஆனால் இதில் கிடைத்த மகிழ்ச்சி, எனக்கு அப்போது வேறெதிலும் கிடைக்கவில்லை...

ம்ம்ம்ம்ம்.....நன்றாக இருந்தது.
தற்போது இல்லை! 

நானாக வளர்த்தேன். மகிழ்ச்சியுடன் வளர்த்தேன். ரசித்தேன். 

இன்று இல்லை.

மனதிலும் எதுவும் இல்லை. எப்போதாவது நினைவு வந்தால், எனக்குள்ளேயே எண்ணி பார்த்துக்கொள்வேன். அவ்வளவே.

மறந்து(?!) கடந்து போவதில் ஒரு துணிச்சலும் தெளிவும் இருக்கத்தான் செய்கிறது. 

#🥀



இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...