பேசாத மொழி - அன்பின் மொழி
ரொம்ப நாளுக்கு பிறகு மனசு விட்டு எழுதணும்னு தோணிட்டே இருக்கு. அதுக்காக தான் இப்போ நேரம் பாக்காம உக்காந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். எதுல இருந்து தொடங்கனும்னு தெரியல. ஆனா அந்த சிரிப்ப பத்தி நிச்சயம் எழுதியே ஆகணும். நா "Thank you so much for everything, உங்கள மீட் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோசம்" னு சொல்லி அவங்களுக்கு கை குலுக்கி, மேலும் என்னோட ரெண்டு கைகள கொண்டு, அவங்க கைகள பற்றிக்கொண்டே திரும்பியும் "Thank you" னு சொல்லி அவங்க முகத்த பார்த்தபோது எனக்கு ஏனோ ஒரு மாதிரி இருந்துச்சி. அவங்க உடனே, "அந்த பசங்க சொன்ன மாதிரி, நா எல்லாருகிட்டயும் ரொம்ப பழகமாட்டேன், ஆனா உன்கிட்ட ரொம்ப close ஆ பழகிட்டேன், இல்ல மா" னு சொல்லி கேட்டபோது, நா "எனக்கும் தோணும், என்ன நம்பிக்கையில என்கிட்டே எல்லாம் நீங்க share பண்றிங்கனு...." சொல்லி ஒரு gap விட்டேன்....ரெண்டு பேரும் சிரிச்சோம். சிரிச்சோம்னு கூட சொல்ல மாட்டேன் ரெண்டு பெரும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். எனக்கு அழுகை வரல, ஆனா அவங்க முகத்த பாக்காம கீழ குனிஞ்சிகிட்டேன்...எனக்கு அந்த இடத்த விட்டு வரவும் மனசு இல்ல, ஆனா திரும்பி போகும்போது சிரிச்சிட்டே போனேன், அந்த காரிடார் க்கு மட்டும் கண்ணு இருந்தா பார்த்து ரசிச்சிருக்கும். அப்படி ஒரு புன்னகை...ரெண்டு நாள் ஆக போகுது ஆனா எப்போ யோசிச்சாலும் ஒரு மாதிரி பூரிப்பா இருக்கு... அந்த சிரிப்புக்கு, அத எனக்கு தந்தவங்களுக்கு நா என்ன செய்ய போறேன்?
No comments:
Post a Comment