Monday, September 4, 2023

 இந்த blog எனக்காக நா எழுதுறது. என்னோட இருபதாவது பிறந்தநாள் அப்போ நா MCC ல படிச்சிட்டு இருந்தேன். அப்போ என்னோட பக்கத்து ரூம் ல இருந்த ஜூலி கிட்ட 'இந்த decade ரொம்ப முக்கியமான decade. இந்த decade ல நம்ம வாழ்க்கைல பல முக்கியமான நிகழ்வுகள் நடக்கும், அடுத்த பாதி வாழ்க்கைல என்னவா இருக்கப்போறோம் னு தீர்மானிக்க கூடிய காலக்கட்டமா இந்த decade இருக்கும்"னு சொன்னேன். உடனே ஜூலி, "ஐசு, இவ்ளோ யோசிச்சியா?" னு கேட்டா... இன்னும் என்னோட ஞாபகம்ல  இருக்கு. 

25 

இந்த இருபத்தைந்து வருசத்தை பாதி பாதியா பிரிச்சி பார்த்தா  நா எவ்ளோ மாறிருக்கேன் னு எனக்கு நல்லா தெரியுது. பயங்கர போட்டி போட்டு படிச்சதுல இருந்து, இன்னைக்கு எனக்கு இவ்ளோ தான் வரும்னு தெரிஞ்சி புரிஞ்சிக்குற பக்குவம் இப்போ வந்துட்டு. இருந்தாலும் சிலது மாறாம அப்படியே தான் இருக்கு. அதுவும் கால போக்குல மாறும்னு நம்புறேன். 

இந்த blog எழுதுறதுக்குள்ள ரெண்டு மூணு போன் வந்துட்டு. என்ன செய்ய பர்த்டே ல...

நெறையா எழுதணும்னு தோணுது...முக்கியமா நா திரும்பி திரும்பி எனக்கு சொல்லணும்னு மனசுல  அடிக்கடி நினைக்குறத சில விசயங்களை பத்தி..

என்னோட இவ்வளவு நாள் வாழ்க்கைல நா மறக்க முடியாத, மறக்கக் கூடாத பல மனுஷங்கள பத்தி எழுதணும்னு நினைக்குறேன். 

அதுல மிக முக்கியமான ஒருத்தங்க - என்னோட மிஸ் - ஜாக்குலின் மிஸ் - இவங்கள பத்தி எவ்ளோ எழுதினாலும் போதாது. நம்ம எல்லா வயசுலயும் யாராவது ஒருத்தரால ஈர்க்கப்பட்றோம். அவங்களோட சிறந்த குணங்கள் நமக்கிட்ட நம்மள அறியாமலேயே பிரதிபலிக்கும்..சில விசயங்கள நம்மளே முயற்சி செய்து பின்பற்றுவோம். அப்படி நா ஜாக்குலின் மிஸ்கிட்டயிருந்து கத்துக்கிட்டது நெறையா.... அந்த சின்ன வயசுல, சரியா சொல்லனும்னா 12-15 வயசுல...அன்னைய தேதிக்கு எனக்கு ஒரு நல்ல டீச்சர் ஆ அவங்க தெரிஞ்சாங்க... இன்னைய வரைக்குமே அப்படிதான் தெரியுறாங்க....

நா இன்னைக்கு ஒரு அளவுக்கு disciplined & Organized ஆ இருக்குறேனா அதுக்கு பெரிய காரணம் அவங்க தான். அவங்களும் இன்னைக்கு wish பண்ணாங்க..மனசுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு..

கூடுதல் தகவல்://இந்த முறை ஜெபி சொல்லாமலே// 

சந்தோசம்.

இருந்தாலும் என் மனசுல எப்போவும் ஒரு வருத்தம் உண்டு. 

அவங்கள பெருமை படுத்துற மாதிரி நா எதுவுமே இதுவரை செய்யலங்கிறது தான். சிலது நா இங்க எழுத விரும்பல. ஆனா அது என் மனசுல எப்போவும் இருக்கும். 

அடுத்த வருஷம் எனக்கு எப்படி இருக்கும்னு தெர்ல. பெருசா எதிர்பார்ப்புகள் இல்ல. ஆனா ஒரு தெளிவு இருக்கு. எனக்கு சில கடமைகள் இருக்கு. என்ன நம்புற, நம்பின சிலருக்கு கண்டிப்பா ஏதாவது செய்யணும்னு ஒரு வேகம் இருக்கு.

இந்த வரி எழுதும்போது எனக்குள்ள இருக்குற வலி எனக்கு மட்டும் தான் வெளிச்சம். 

என்னோட நாளைக்கான நம்பிக்கைல கடந்த காலத்துக்கான பல பதில்கள் ஒளிஞ்சி இருக்கு. இந்த 25 வயசு ஐஸ்வர்யா-க்கு நா கொடுக்க வேண்டியே பரிசு ஒன்னு இருக்கு. அதுக்கான நாள் வெகு சீக்கிரத்தில வரும்னு நம்புறேன்.

ஒளி எங்கு போகும்,

உனை வந்து சேரும்..!


நம்பிக்கையில்...


(தொடரும்...)


Updated on 19th September, 2023


Originally posted on 4th September. 

Saturday, May 6, 2023

 பேசாத மொழி - அன்பின் மொழி 

ரொம்ப நாளுக்கு பிறகு மனசு விட்டு  எழுதணும்னு தோணிட்டே இருக்கு. அதுக்காக தான் இப்போ நேரம் பாக்காம உக்காந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். எதுல இருந்து தொடங்கனும்னு தெரியல. ஆனா அந்த சிரிப்ப பத்தி நிச்சயம் எழுதியே ஆகணும். நா "Thank you so much for everything, உங்கள மீட் பண்ணதுல  எனக்கு ரொம்ப சந்தோசம்" னு சொல்லி அவங்களுக்கு கை குலுக்கி, மேலும் என்னோட ரெண்டு கைகள கொண்டு, அவங்க கைகள பற்றிக்கொண்டே திரும்பியும் "Thank you" னு சொல்லி அவங்க முகத்த பார்த்தபோது எனக்கு ஏனோ ஒரு மாதிரி இருந்துச்சி. அவங்க உடனே, "அந்த பசங்க சொன்ன மாதிரி, நா எல்லாருகிட்டயும் ரொம்ப பழகமாட்டேன், ஆனா உன்கிட்ட ரொம்ப close ஆ பழகிட்டேன், இல்ல மா" னு சொல்லி கேட்டபோது, நா "எனக்கும் தோணும், என்ன நம்பிக்கையில என்கிட்டே எல்லாம் நீங்க share பண்றிங்கனு...." சொல்லி ஒரு gap விட்டேன்....ரெண்டு பேரும் சிரிச்சோம். சிரிச்சோம்னு கூட சொல்ல மாட்டேன் ரெண்டு பெரும் மூஞ்ச மூஞ்ச பாத்துக்கிட்டோம். எனக்கு அழுகை வரல, ஆனா அவங்க முகத்த பாக்காம கீழ குனிஞ்சிகிட்டேன்...எனக்கு அந்த இடத்த விட்டு வரவும் மனசு இல்ல, ஆனா திரும்பி போகும்போது சிரிச்சிட்டே போனேன், அந்த காரிடார் க்கு மட்டும் கண்ணு இருந்தா பார்த்து ரசிச்சிருக்கும். அப்படி ஒரு புன்னகை...ரெண்டு நாள் ஆக போகுது ஆனா எப்போ யோசிச்சாலும் ஒரு மாதிரி பூரிப்பா இருக்கு... அந்த சிரிப்புக்கு, அத எனக்கு தந்தவங்களுக்கு நா என்ன செய்ய போறேன்?

Monday, October 18, 2021

A fine monday morning....

 Reading The Hindu Newspaper and dreaming about various things has become my daily routine nowadays. I recently read a quote on Instagram, which says "Change with the changing times."

I often feel, change is good.

I dreamed about becoming a lawyer once, now studying journalism.

Sometimes, our actions and moves might not make sense to others around us. I think that is completely fine.

The only thing, I personally feel, what all we need is, being there for ourselves, no matter what happens.

Throughout our life, we are learning or trying to learn 'something.'

There is no end for learning. In such case, don't be afraid or worry about the future. Please be kind to yourself and take it everything as a lesson. 

Tuesday, May 5, 2020

In a world full of chats and video calls, I still wish for a hand-written letter.

:) 

Saturday, April 25, 2020

"உன் பேரு என்ன?"

ஐஸ்

"இத விட நல்ல பேரே இல்லையா?"

ஐஸ் இல்ல ஐஸ்வர்யா...

"ஓ!"

(UKG பயிலும் குழந்தைக்கும் எனக்குமான உரையாடல்)

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...