Sunday, August 4, 2024
Hoping
Sunday, July 14, 2024
🧿
Tuesday, December 5, 2023
கடந்த காலம்
Tuesday, November 7, 2023
Monday, September 4, 2023
இந்த blog எனக்காக நா எழுதுறது. என்னோட இருபதாவது பிறந்தநாள் அப்போ நா MCC ல படிச்சிட்டு இருந்தேன். அப்போ என்னோட பக்கத்து ரூம் ல இருந்த ஜூலி கிட்ட 'இந்த decade ரொம்ப முக்கியமான decade. இந்த decade ல நம்ம வாழ்க்கைல பல முக்கியமான நிகழ்வுகள் நடக்கும், அடுத்த பாதி வாழ்க்கைல என்னவா இருக்கப்போறோம் னு தீர்மானிக்க கூடிய காலக்கட்டமா இந்த decade இருக்கும்"னு சொன்னேன். உடனே ஜூலி, "ஐசு, இவ்ளோ யோசிச்சியா?" னு கேட்டா... இன்னும் என்னோட ஞாபகம்ல இருக்கு.
25
இந்த இருபத்தைந்து வருசத்தை பாதி பாதியா பிரிச்சி பார்த்தா நா எவ்ளோ மாறிருக்கேன் னு எனக்கு நல்லா தெரியுது. பயங்கர போட்டி போட்டு படிச்சதுல இருந்து, இன்னைக்கு எனக்கு இவ்ளோ தான் வரும்னு தெரிஞ்சி புரிஞ்சிக்குற பக்குவம் இப்போ வந்துட்டு. இருந்தாலும் சிலது மாறாம அப்படியே தான் இருக்கு. அதுவும் கால போக்குல மாறும்னு நம்புறேன்.
இந்த blog எழுதுறதுக்குள்ள ரெண்டு மூணு போன் வந்துட்டு. என்ன செய்ய பர்த்டே ல...
நெறையா எழுதணும்னு தோணுது...முக்கியமா நா திரும்பி திரும்பி எனக்கு சொல்லணும்னு மனசுல அடிக்கடி நினைக்குறத சில விசயங்களை பத்தி..
என்னோட இவ்வளவு நாள் வாழ்க்கைல நா மறக்க முடியாத, மறக்கக் கூடாத பல மனுஷங்கள பத்தி எழுதணும்னு நினைக்குறேன்.
அதுல மிக முக்கியமான ஒருத்தங்க - என்னோட மிஸ் - ஜாக்குலின் மிஸ் - இவங்கள பத்தி எவ்ளோ எழுதினாலும் போதாது. நம்ம எல்லா வயசுலயும் யாராவது ஒருத்தரால ஈர்க்கப்பட்றோம். அவங்களோட சிறந்த குணங்கள் நமக்கிட்ட நம்மள அறியாமலேயே பிரதிபலிக்கும்..சில விசயங்கள நம்மளே முயற்சி செய்து பின்பற்றுவோம். அப்படி நா ஜாக்குலின் மிஸ்கிட்டயிருந்து கத்துக்கிட்டது நெறையா.... அந்த சின்ன வயசுல, சரியா சொல்லனும்னா 12-15 வயசுல...அன்னைய தேதிக்கு எனக்கு ஒரு நல்ல டீச்சர் ஆ அவங்க தெரிஞ்சாங்க... இன்னைய வரைக்குமே அப்படிதான் தெரியுறாங்க....
நா இன்னைக்கு ஒரு அளவுக்கு disciplined & Organized ஆ இருக்குறேனா அதுக்கு பெரிய காரணம் அவங்க தான். அவங்களும் இன்னைக்கு wish பண்ணாங்க..மனசுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு..
கூடுதல் தகவல்://இந்த முறை ஜெபி சொல்லாமலே//
சந்தோசம்.
இருந்தாலும் என் மனசுல எப்போவும் ஒரு வருத்தம் உண்டு.
அவங்கள பெருமை படுத்துற மாதிரி நா எதுவுமே இதுவரை செய்யலங்கிறது தான். சிலது நா இங்க எழுத விரும்பல. ஆனா அது என் மனசுல எப்போவும் இருக்கும்.
அடுத்த வருஷம் எனக்கு எப்படி இருக்கும்னு தெர்ல. பெருசா எதிர்பார்ப்புகள் இல்ல. ஆனா ஒரு தெளிவு இருக்கு. எனக்கு சில கடமைகள் இருக்கு. என்ன நம்புற, நம்பின சிலருக்கு கண்டிப்பா ஏதாவது செய்யணும்னு ஒரு வேகம் இருக்கு.
இந்த வரி எழுதும்போது எனக்குள்ள இருக்குற வலி எனக்கு மட்டும் தான் வெளிச்சம்.
என்னோட நாளைக்கான நம்பிக்கைல கடந்த காலத்துக்கான பல பதில்கள் ஒளிஞ்சி இருக்கு. இந்த 25 வயசு ஐஸ்வர்யா-க்கு நா கொடுக்க வேண்டியே பரிசு ஒன்னு இருக்கு. அதுக்கான நாள் வெகு சீக்கிரத்தில வரும்னு நம்புறேன்.
…
ஒளி எங்கு போகும்,
உனை வந்து சேரும்..!
நம்பிக்கையில்...
(தொடரும்...)
Updated on 19th September, 2023
Originally posted on 4th September.
இந்த நாள் இனிய நாள் ✨
... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...
-
Reading The Hindu Newspaper and dreaming about various things has become my daily routine nowadays. I recently read a quote on Instagram, w...
-
பேசாத மொழி - அன்பின் மொழி ரொம்ப நாளுக்கு பிறகு மனசு விட்டு எழுதணும்னு தோணிட்டே இருக்கு. அதுக்காக தான் இப்போ நேரம் பாக்காம உக்காந்து எழுத ...