Saturday, March 21, 2020

நான் பேப்பரில் எழுதி எழுதி அடித்த கவிதையெல்லாம் அவளுக்கானது !

Friday, March 6, 2020

No!!!!
.
.
.
அன்று சுதா மே(மா)ம் வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் "Can i barrow ஐஸ்வர்யா என்று Permission கேட்டபடி , மனதில்  கேள்வியுடன்  வந்த ஆஷிக் சாருக்கு நான் அளித்த பதில்.

அவர் கேட்டது (சொன்னது) 'ஐஸ்வர்யா நீ இந்த வாட்டி Imperium Convenor maa'

No!!!!
இப்படியாக தொடங்கியது இந்த பயணம்...Imperium பயணம்!

ஜனவரி 8 தொடங்கிய இந்த பயணம்  இன்று (மார்ச் 6) முடிவடைந்தது.

'நோ' என்று சொல்லித் தொடங்கிய பயணம் எனக்கு நல்ல பல அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது.

ஆஷிக் சாரிடம் பல போலி காரணங்களையும் சில உண்மை நிலவரங்களையும் கூறி நழுவ நினைத்த போது, அவர் சொன்னது ஒன்று தான் ....
.
.
.
"நாலு வருசமா இங்க இருக்க மா, நீ ஏன் பண்ணமாட்டேனு சொல்ற" என்றார்.

அவரது கேள்வி நியாமானது தான்..
சரி என்று சொல்லிவிட்டேன், எனினும் பயமும் தயக்கமும் என்னை துரத்திக்கொண்டே இருந்தது.
அருகில் இருந்த அறையில் அன்றே சார் தேர்ந்தெடுத்திருந்த  குழுவினருடன் ஒரு சிறிய மீட்டிங் ...

எனக்கு பெரிதாக பரிட்சயம் இல்லாதவர்கள். பயம் அதிகரித்தது.
.
.
.
.
என்னுடைய தயக்கத்தை அனைவரிடத்திலும் சார் கூற, நான் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்து சமாளித்தேன்..

மந்தமாக தான் எங்கள் பணியைத் தொடங்கினோம்.
என்னுடைய நண்பர்கள் சிலரிடம் என்னுடைய பயத்தைக் கூறிய போது, அவர்கள் பெரும்பாலும் சொன்னது "உன்னால் முடியும்..அதே நேரத்தில் உன் உடல்நிலையைக் கருத்தில் கொள்" என்பதுதான்.

இடையில் தவறான முடிவை எடுத்து விட்டோம் என நினைக்காமல் இல்லை...
எனினும் எதோ ஒன்று 'சரி, செய்துதான் பார்ப்போம் ' என்ற மனநிலை.
முழு மனதாக கவனம் செலுத்தினேன்...
எனக்காகவே உருவாக்கியது போல் ஒரு டீம்...
நகைச்சுவை க்கு பஞ்சமேயில்லை.
ஷூக்கத்' இருக்கும்வரை எந்த பயமும் இல்லை என்று அப்போதே என் மனம் சொல்லியது.
சற்று சீரியஸாக 'குட்டி' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணப்பட்டாலும் எனக்கும் ஷூக்கத் கும் நன்றாக பொருந்திப்போனாள்..
டோரா' வின் உதவி இன்றியமையாதது.
மேலும் பலர் உதவியுடன் இன்று (மார்ச் 6) நன்றாக நடந்து முடிந்தது எங்களது இம்பிரியம்.

பல சமயத்தில் எங்களது பணியில் தொய்வு ஏற்பட்டது, கடைசிநிமிடத்திலும் கூட.... எப்படியோ சமாளித்துவிட்டோம்.!

சில நல்ல மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டேன்..மகிழ்ச்சி!

என்னுடைய அப்பா எனக்கு தந்த ஒரேயொரு அறிவுரை 'நல்ல பெயர் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்ட பெயர் வாங்கி விடாதே ' என்பதுதான்..
என் அப்பாவைக் காட்டிலும் என் கோபத்தை நன்கறிந்தவர் எவருமிலர்...
என்னை நானே பிறரை அனுசரித்து போகும் பழக்கமற்றவள் என்று இவ்வளவு நாள் எண்ணிக்கொண்டிருந்தேன்...'அப்படியில்லை நீ ' என்ற உணர்வு என்மீது எனக்கு தோன்றிவிடட்து/ ஏற்பட்டுவிட்டது.

யார் மனதையும் புண்படுத்தவில்லை என நம்புகிறேன்.

எப்படியோ இப்பயணம் எனக்கு ஒரு நல்ல அனுபவம்.

I hope i did justice to my Award.
:)

Monday, January 27, 2020

அந்த டேபிள்...!

சிரிப்புச் சத்தம்.
ஆம் அந்த டேபிள் அதிகம் கண்டது எங்களுடைய சிரிப்புச் சத்தத்தைதான்...
எங்களுடைய கூட்டம் சற்று பெரியது தான் என்றாலும், அந்த டேபிள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அந்த டேபிளுக்கும் எங்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பந்தம் இருப்பதாகத்தான் நான் எண்ணுகிறேன்...நாங்கள் அந்த டேபிளில் உணவை மட்டும் பரிமாறவில்லை எங்களுடைய பல இன்ப துன்பங்களை பரிமாறியிருக்கிறோம்..அந்த டேபிள் பல குறும்புகளைக் கண்டுள்ளது. ஜெயந்தியின் முட்டை பல முறை ஒழித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த அடர் நிற டேபிளில் ரம்யாவின் மஞ்சள் தட்டு அத்தனை பளீரென்று இருக்கும்.
ஈவ்லினின் தக்காளி தொக்குக்கென்று ஒரு கூட்டம் கூடும். சரண்யாவின் பொடி அவ்வளவு வேகமாக காலியாகும். "எங்கிட்ட வம்பு பண்ணாம உன்னால இருக்க முடியாதுல" என்றபடி ஈவ்லின்,
"கேளேன்...இங்க கேளு" என்றவாறு பேசிக்கொண்டே இருக்கும் ஷேரன், எதையாவது சிந்தித்தப்படியே இருக்கும் பூர்ணி, கலகல என அரட்டை அடித்தபடியே ஜென்னி, பெட்ஸி, ஜேஷிபா, 'அந்த' இடத்தில் நான் தான் உட்காருவேன் என முரண்டுபிடித்தபடியே நான்;
குட்டித்தட்டில் சாய்மா உண்ணும் சோற்றை எண்ணி விடலாம், நாங்கள் எல்லாரும் வந்து அமர்ந்த பின் மிக மெதுவாக வரும் ஷமிதா
மற்றும் தோசை தின்று பட்டம் வென்ற தோசை மபிஷா, இதையெல்லாம் அமைதியாக கவனித்தபடியே சாப்பிடும் என் பிரியா ;
ஆகா!!! எத்தனை நல்ல நினைவுகள் ...
பல சோகமான நிகழ்வுகளும் அங்கு பகிரப்பட்டுள்ளது.
முதல் காதல் தொடங்கி பல அழகான நினைவுகளை நாங்கள் பகிர்ந்து கொண்ட இடம் "அந்த டேபிள்".
இன்றும் அந்த டேபிள் அப்படியே தான் இருக்கிறது..ஆனால் நான் மேலே குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர வேறு யாரும் இப்போது இல்லை. வெவ்வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த பசுமையான நிகழ்வுகளை மீட்டெடுக்கவே அதே டேபிளில் இப்போதும் அமர்வதுண்டு.

வருங்காலத்தில் அந்த இடம், அந்த டேபிள் எத்தகைய மாற்றம் பெறப்போகிறது  என தெரியவில்லை.
அப்படியே இருக்கும் பட்சத்தில் எங்களில் யார் அதனை கண்டாலும் ஒரு நிமிடமேனும் அங்கு நின்று சிரித்து விட்டுதான் செல்வோம் என்பது மட்டும் நிதர்சனம்.



Wednesday, December 25, 2019

நன்றி 2019✨

2018 இரத்தக் கறையுடன் தொடங்கியது (கல் தட்டி காலில் அடி).....அதனால் சற்று பயத்துடன் மிக கவனமாக  2019 ம் ஆண்டை வரவேற்றேன் (வழக்கம் போல் பிள்ளையார் கோவிலில்).
என்னுடைய வேண்டுதல் என்னவாக இருந்திருக்கும் என்று இப்போது அசைப் போட்டுப் பார்க்கிறேன்.
அப்பாவின் கை  சரியாக வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருந்திருக்கக்கூடும்.
பின்பு என்னுடைய முதுகலை கனவாக இருந்திருக்கலாம்...சரியாக நினைவு இல்லை.

என்னுடைய 2019 ம் ஆண்டை மே மாதத்திற்கு முன் ,மே மாதத்திற்கு பின் என பிரிக்கலாம்..
அதிகமான மன உளைச்சலுக்கு உண்டான ஆண்டு என்னைப் பொறுத்தவரையில் இதுவே.

எங்கு இருந்து எல்லையற்ற மகிழ்ச்சியை பெற்றேனோ அங்கு இருந்து மனக்கசப்பையும் பெற்றேன்.

சற்று திரும்பிப் பார்க்கிறேன்...



எதற்காக அன்று இந்த புகைப்படம் எடுத்தேன் என்று தெரியவில்லை.
 கண்ணீர் பொங்கிய கண்களுடன் எடுத்த புகைப்படம்.

(இடம்: வேளச்சேரி)

29/06/2019
7:25 pm

அத்தனை அழுகை;
என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாள்.

இப்போது திரும்பிப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது.
---எதுவும் நிரந்தரம் இல்லை---
சிலர் என்மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்கள், வைத்திருக்கிறார்கள் என்பதை மிக அழகாக இவ்வாண்டு புரியவைத்தது.
நான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நல்ல சில தருணங்களை எனக்கு அளித்தது.

நான் துவண்டு போகிறபோதெல்லாம் எனக்கு ஊக்கமளித்தவர்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கிளியோபாட்ரா உனக்கு  நான் எவ்வாறு நன்றி சொல்வேன் !?
என்னைப் பலர் Positive energyக்காரி என்பார்கள்.
நான் யார் என்பது கிளியோபாட்ரா விற்கு
மட்டுமே வெளிச்சம்.
நிறைய அன்புகள் கிளியோபாட்ரா!

தம்பி பீட்டர் பற்றி எழுதாமல் 2019ஆம் ஆண்டை என்னால் நிறைவு செய்ய முடியாது.
தம்பி பீட்டர் உனக்கு ஒரு நல்ல அக்காவாக இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
உனக்கு வழங்கிய  அறிவுரைகள் அனைத்தும் எனது
அனுபவங்கள்.
நன்றி தம்பி பீட்டர் .

இவ்வருடம் என்னை துரத்திய பல கேள்விகளுள் முதன்மையானது "என்னிடம் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள்? " , "என்னை ஏன் அப்படி நடத்தினார்கள்" என்பதுதான்.

கிளியோபாட்ரா எனக்கு வழங்கிய அறிவுரை தற்போது நினைவுக்கு வருகிறது...
"எதிர்பார்ப்பைக் குறை"
"ரொம்பவும் வெளிப்படையாக இருக்காதே"

அறிவுரைகள் ஏற்கபடுகிறது கிளியோபாட்ரா.

பலரை சிரிக்க வைத்த நான்  ,
சிலர் அழ காரணமாகவும் இருந்திருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன்.
மன்னித்துவிடுங்கள்.

நான் உண்மையாக இருந்தவர்கள் என்னிடம் உண்மையாக இருந்தார்களா என்றால்.....
'உன்னை யார் எதிர்பார்க்கச் சொன்னது ?'
என்று என் உள்ளுணர்வு பதில் அளிக்கிறது.
அதுவும் சரிதானே.!

நான் சற்றும் எதிர்பார்க்காதவர்களெல்லாம் பல சமயங்களில் எனக்கு உதவினார்கள்.
அவர்களை இப்போது நன்றியுணர்வுடன் நினைவுகூறுகிறேன்.

2019 ஆம் ஆண்டு எனக்கு பல நல்ல படிப்பினைகளை தந்தது.
உங்களுக்கும் தந்திருக்கக்கூடும்.
அவற்றையெல்லாம் சற்று பொறுமையாக உட்கார்ந்து நினைவுப்படுத்திப் பாருங்கள்.

அவை உங்களை முன்னோக்கி தொடர்ந்து பயணிக்கத் தூண்டும்.

நன்றி 2019

:)



Wednesday, September 4, 2019





சற்றும் எதிர்பார்க்காதது...
எத்தனை எத்தனை நினைவுகள்...மிகவும் அழகான, பசுமையான நினைவுகள்..
என் நினைவுபடி ஆட்டோவில் தொடங்கியது அந்த பயணம்..ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லாமலிருக்க அத்தனை ஆர்ப்பாட்டம் நிகழும் வீட்டில்..! கழிவறைக்குள் ஒழிந்த நாட்களெல்லாம் உண்டு...நினைவுகூறுகிறேன்...எத்தனை அழகான நினைவுகளை தந்து சென்றிருக்கிறார் என்று!.
ஆட்டோவில் ஏறியதும் அழ தொடங்கும் என்னை ஆசுவாசப்படுத்த அவர் ஒருபோதும் தவறியதில்லை....ஆட்டோ ஆம்னி ஆகி,பின்பு வேன் ஆக , அதற்கு அவர் போட்ட உழைப்பு என்ன என்பதை நன்கு அறிவோம்..அவர் பயிற்றுவிக்கும் வகுப்புகள் எல்லாம் அத்தனை அறிவார்ந்ததாக இருக்கும்....கணினியை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே...மதிய உணவு வேளையில் நான் மீன் (முள்ளை நீக்கி) சாப்பிடுவதைக் கண்டு விளையாட்டாக,மீனின் முள்ளை சாப்பிட்டுக் காட்டு என்பார்...நானும் சாப்பிட்டுவிட்டு பெரிய சாதனை நிகழ்த்தியது போல் அவரை பார்ப்பேன்..சிரிப்பார்...அவருக்கும் எங்களுக்குமான உறவு ஆசிரியர் மாணவர் என்பதைத் தாண்டி, உணர்வுபூர்வமாக இருந்தது...அவர் மீதான மரியாதை, அன்பு கலந்த பயம் இன்றும் தொடர்கிறது...இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த போது  நான் பேசியதைக் கண்டு, 'இவள் வழக்கறிஞர் ஆனால் நன்றாக இருக்கும்' என்றார். இன்று எங்களை விட்டு தூரம் சென்று விட்டார்.
அவருடைய இழப்பு வார்த்தைகளாலோ எழுத்துக்களாலோ விவரிக்க முடியாதது...எங்களுடைய வளர்ச்சியில் பெருமிதமும் மகிழ்ச்சியும் எப்போதும் கொண்டிருந்தார்...பெருவெற்றியுடன் அவரை சந்தித்துவிட்டு 'அடித்தளம் நீங்க போட்டது சார் ' என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்...அப்படி இனி அவரிடம் கூற முடியாது என்று நினைக்கிற பொழுது கண்ணீர் பொங்குகிறது...அவர் எங்கு சென்றாலும் அவருடைய ஆசியும் வாழ்த்துக்களும் எப்போதும் எங்களுக்கு உண்டு  என்பதை நாங்கள் அறிவோம்...எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கு பின்னாலும் நீங்கள் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் இருக்கிறது, சார்..!


(என் அன்பிற்கினிய ஆசிரியருக்காக....)

இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...