Saturday, February 22, 2025

அன்பு

"அவ எனக்கு பிள்ள"

சில நேரங்களில் சில மனிதர்கள் நமக்கு என்றும் மறக்கமுடியா மன மகிழ்வையும் மன நிறைவையும் சத்தமே இல்லாமல் தந்து கடக்கிறார்கள்.

🫴🏼✨
 
#MyFairy

Saturday, January 11, 2025

மனதிற்கு இதமான மனிதர்கள்

என்னோட இந்த blog-ல, நா இதுவர சந்திச்ச, என் மனதுக்கு இதமான மனுஷங்கள பத்தி எழுதியிருக்கேன். வெளிப்படையா எழுதுறத விட, மறைமுகமா எழுதினது தான் அதிகம். நம்ம மனசுல இருக்குற ஒரு விஷயம் யாருக்குமே பகிராம உள்ளேயே வச்சி ரசிக்கிறதுல ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது. ஒருத்தங்க கிட்ட நம்ம மகிழ்ச்சிய பகிரும் போது அது இரட்டிப்பாகும்-னு பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையும் கூட தான். இருந்தாலும், சமீப காலங்கள்ல என் மனசுக்கு நெருக்கமான சில நிகழ்வுகள், விஷயங்கள், சம்பவங்கள்னு நா இந்த blog-ல எழுதுறத வழக்கமா வச்சிருக்கேன். எந்த மனுஷங்ககிட்டயும் பகிராம, மனசுல இருக்குற ஒரு விதமான உணர்வோட, சோகமோ சுகமோ அத எழுதி முடிக்கும் போது ஒரு அமைதி கிடைக்கும்.
அதுதான் என்ன பொறுத்தவர The Moments. 

பெரும்பாலும் அந்த மாதிரி MOMENTS நம்ம மனசுக்குள்ள என்னைக்கும் ஒரு ஓரத்துலயாவது இருக்கும். ஆனாலும் காலம் போக போக அந்த moments அதே உணர்வ நமக்கு திருப்பித்தரதில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு விஷயம் என்ன பூரிப்படைய செஞ்சிருக்கலாம். ஆனா இப்போ அதே விஷயம் அதே பூரிப்ப தருமானு கேட்டா, நிச்சயமா இல்ல. மாறிட்டே தான் இருக்கு. இருந்தாலும் இங்க எழுதுறதுக்கு காரணம் ஒன்னுதான். RE-LIVE பண்ண தான். நேத்து ஒரு மகிழ்வான நாள். 

சக்கரை பொங்கல் 🥄
I'M LIVING MY MOMENT என்பது போல ஒரு 'நடனம்' 
Games 
📲🍚
As usual Dialogues

நிறைவான நாள்னு சொல்றத விட, மகிழ்வான நாள்.

THANK YOU, சில மனுஷங்க எவ்ளோ நாள் நம்ம LIFEல இருப்பாங்கனு தெரியல, ஆனா இருக்குற வர அவங்க தர மனதுக்கு இதமான அன்பு இருக்கும்னு நம்புவோம்.

#மனிதர்கள் #🌻



Friday, December 6, 2024

அறிந்து தெளிதல்

யாருமற்ற அறையில், நான் சுவாசிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும் அமைதியில், யோசித்து பார்ப்பதற்கு பல விஷயங்கள் இருந்தது.

வருவார்கள் 
போவார்கள் 
உனக்கு நிரந்தரம் நீ
உனக்கான உலகில் பிறர் உள்நுழைய தான் நீ அனுமதி தரவேண்டுமே அன்று
வெளியேற அல்ல
வருவார்கள் 
போவார்கள்


Acceptance is peace 🕊️ 

Wednesday, September 11, 2024

நீண்ட இரவு

நம்ம நினைச்ச விஷயம் நடக்கும் போது ஒரு விதமான எண்ணங்கள் தோன்றி நம்மல தூங்க விடாம பண்ணுது.. அப்படியான ஒரு நாள் தான் இன்னைக்கு..!


Sunday, August 4, 2024

Hoping

 Srilanka விற்கு போக வேண்டும் என்று அடிக்கடி நான் பலரிடம் சொல்வதுண்டு. அப்படியான ஒரு உரையாடல் இன்று என் அப்பாவோடு... அப்பா ஶ்ரீலங்கா குறித்து தான் அறிந்ததை என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் அதை கேட்டவாறே YouTube யில் ஶ்ரீலங்கா குறித்த வீடியோக்கள் பார்த்துகொண்டிருந்தேன். 
அப்பா உடனே, "நீ போகும்போது என்னையும் கூட்டிட்டு போ" என்றார்.

எங்க அப்பா என்கிட்ட இப்படி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனு சொல்லி கேக்குறது இதுவே முதல்முறை.

ஶ்ரீலங்கா, I'm waiting for you!

🧿

Hope is a good thing :))




இந்த நாள் இனிய நாள் ✨

... நம்ம வாழ்க்கைல சில மனுஷங்க விட்டுட்டு போற சுவடு மட்டும் ரொம்ப அழுத்தமா அப்படியே இருந்துட்டே இருக்கும். அப்படியான ஒருத்தங்க தான் எனக்கு அ...